OUR CLIENTS
உடல் எடையை குறைக்க லேகியம் சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு!
உடல் எடையை குறைக்க லேகியம் சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு! Posted on 29-Mar-2018 உடல் எடையை குறைக்க லேகியம் சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு!

 சென்னை, மார்ச் 29-

 உடல் எடையை குறைப்பதற்காக லேகியம் சாப்பிட்ட வாலிபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயல் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (வயது 28). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் லேகியம் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதுவயிற்று வலியால் கடுமையாக அவதிப்பட்ட அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீப்  இன்று  உயிரிழந்தார்.    லேகியம் சாப்பிட்டபிறகே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரதீப் உடலை பிரேத பரிசோதனை செய்து டாக்டர்கள் அறிக்கை அளித்த பிறகே அவரது மரணத்திற்கான முழு விவரம் தெரியவரும்.

 இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் இறந்தது பற்றி தகவல் கிடைத்ததும் லேகியம் விற்ற நபர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Label