OUR CLIENTS
குடியாத்தத்தில் கொடிய வி‌ஷம் கொண்ட 100 பாம்பு குட்டிகள் - 80க்கும் அதிகமான பாம்பு முட்டைகள் மீட்பு
குடியாத்தத்தில் கொடிய வி‌ஷம் கொண்ட 100 பாம்பு குட்டிகள் - 80க்கும் அதிகமான பாம்பு முட்டைகள் மீட்பு Posted on 29-Mar-2018 குடியாத்தத்தில்  கொடிய வி‌ஷம் கொண்ட  100 பாம்பு குட்டிகள் -  80க்கும் அதிகமான பாம்பு முட்டைகள் மீட்பு

குடியாத்தம்,  மார்ச் 29-

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கொடிய வி‌ஷம் கொண்ட 100 பாம்பு குட்டிகள் மற்றும் 80-க்கும் அதிகமான பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டன.

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திராநகரை சேர்ந்தவர் ஜானகிராமன். தொழிலாளி. இவர், இன்று காலை தனது வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது, ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட கொடிய வி‌ஷம் கொண்ட பாம்பு குட்டிகள் ஒன்றுமேல் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தன.  பாம்பு குட்டிகளுக்கு அருகில் 80-க்கும் அதிகமான பாம்பு முட்டைகளும் குவிந்து இருந்தன. அந்த முட்டைகளில் இருந்து ஒவ்வொரு பாம்பு குட்டிகள் வெளியே வரத் தொடங்கின. இதனை பார்த்து, ஜானகிராமன் அதிர்ந்து போனார்.

அக்கம், பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டுவந்து அதிர்ச்சியுடன் பாம்பு குட்டிகளையும், முட்டைகளையும் பார்த்தனர். மேலும் அவர்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) மேகநாதன் தலைமையில் உதவி அலுவலர் மூர்த்தி மற்றும் வீரர்கள் முத்துராஜா, சதீஷ், சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் விரைந்து வந்து 100-க்கும் மேற்பட்ட அந்த கொடிய வி‌ஷப்பாம்பு குட்டிகளை மீட்டனர்.  பாம்பு குட்டிகளை பிடித்த நேரத்தில் முட்டைகளில் இருந்து பாம்புகள் வெளியே வந்த வண்ணம் இருந்தன. வனத்துறையினர் அந்த பாம்பு குட்டிகளையும் பிடித்தனர். முட்டைகளையும் கைப்பற்றினர்.

பாம்பு முட்டைகள் அனைத்தும், கொத்து கொத்தாக இருந்தன. ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு பிசைப்பு தன்மையுடன் வித்தியாசமாக இருந்தன. மீட்கப்பட்ட பாம்பு குட்டிகள் எந்தவகை என்பது உடனடியாக தெரியவில்லை. தீயணைப்புத்துறையினர், வனத்துறைக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். வனக்காப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான வன ஊழியர்கள் பிடிபட்ட பாம்பு குட்டிகள் எந்த வகை என கண்டறிந்து வருகின்றனர்.  மேலும், பாம்பு குட்டிகளை வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர்.

Label