OUR CLIENTS
குக்கர் சின்னத்துக்கு தடை இல்லை! நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்- தினகரன் விளக்கம்
குக்கர் சின்னத்துக்கு தடை இல்லை! நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்- தினகரன் விளக்கம் Posted on 29-Mar-2018 குக்கர் சின்னத்துக்கு தடை இல்லை!    நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்- தினகரன் விளக்கம்

சென்னை, மார்ச் 29-   

டெல்லி உயர் நீதிமன்றம் குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வில்லை. அதனை நிறுத்தி வைத்துள்ளனர் என்று தினகரன் விளக்கம் அளித்துள்ளார்

 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன் எம்.எல்.. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-   குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட்டதற்கு உச்சநீதி மன்றம் தடை போட்டதாக தொலைக்காட்சிகளில் பார்த்தேன். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. தடை கொடுத்தால் அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கும். டெல்லி உயர்நீதி மன்றத்திற்கு மூல வழக்கை விசாரிக்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.

 தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் தரப்பிற்கு ஒதுக்கியதை எதிர்த்து பொதுச் செயலாளர் மற்றும் என் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை விசாரிக்க இரு வாரங்களுக்குள் பெஞ்ச் அமைத்து ஏப்ரல் 30ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னம் வழங்கியதை உச்சநீதிமன்றம் தடையோ, ஒதுக்கி வைக்கவோ இல்லை. உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதுஆளும் தரப்பினர் என்னை வேறு கட்சி தொடங்கச் சொல்லி நீதிமன்றத்தில் சொல்கிறார்கள். கட்சி பெயரை அறிவித்து கொடியை அறிமுகப்படுத்தினால், அதிமுக கொடி போன்று உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு போடுகிறார்கள். அதிமுக கொடி என்பது கருப்பு வெள்ளை, நடுவில் வெள்ளை நிறத்தில் மார்பளவு அண்ணா உருவம். எங்கள் கொடியில் கருப்பு, வெள்ளை, சிவப்பு, நடுவில் அம்மா உருவம் உள்ளது.

 அதிமுக கொடியில் இருப்பது அண்ணா உருவம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொடியில் உள்ளது அம்மா உருவம்மக்களுக்கும், தொண்டர்களுக்கும் அண்ணா உருவத்திற்கும், அம்மா உருவத்திற்கு வித்தியாசம் தெரியாமலா இருக்கும்ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு இரட்டை இலையை காலி செய்தோம். அதற்காக பயந்து கொண்டு தான் இது போன்றெல்லாம் செய்கிறார்கள்.

 3 வாரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக வர இருந்தோம். தேர்தல் ஆணையத்தில் அதற்கான விசாரணை முடிந்து உத்தரவு போடுவதாக சொல்லியிருந்தார்கள். இதன் மீது தடை கேட்டு உச்சநீதி மன்றத்திற்கு சென்று தடை கேட்டார்கள். அதற்கு உச்சநீதி மன்றம் தடை போடவில்லை. நிறுத்தி வைக்க சொல்லியிருக்கிறது. இதுபற்றிய முழு விவரத்தையும் படித்த பிறகு சொல்கிறேன்உச்சநீதிமன்றம் மூல வழக்கை விசாரணை செய்யச் சொல்லி டெல்லி உயர் நீதிமன்றத்தை அறிவுறுத்தியுள்ளது. மூல வழக்கை விசாரிக்க இருக்கிறார்கள் ரொம்ப நல்லது. அதில் போராடி நிச்சயம் வெற்றி பெறுவோம்.   இவ்வாறு தினகரன் கூறினார்.

Label