OUR CLIENTS
குரங்கு தூக்கிச் சென்ற பச்சிளங்குழந்தை சடலமாக மீட்பு
குரங்கு தூக்கிச் சென்ற பச்சிளங்குழந்தை சடலமாக மீட்பு Posted on 02-Apr-2018 குரங்கு தூக்கிச் சென்ற பச்சிளங்குழந்தை சடலமாக மீட்பு

கட்டாக், ஏப்.2 
ஒடிசாவில் நேற்று முன்தினம் குரங்கு தூக்கிச் சென்றதாக சொல்லப்பட்ட, பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
கட்டாக் பகுதியில் உள்ள தலபஸ்தா கிராமத்தில், பிறந்து 16 நாட்களே ஆன குழந்தை அதன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தது. வீடு திறந்திருந்ததால் உள்ளே நுழைந்த குரங்கு, பச்சிளங்குழந்தையைத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட தாய் கூச்சலிட்டதை அடுத்து அங்கு கூடியவர்கள் வனத்துறை மற்றும் மீட்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். 30 மீட்புப்படையினர் இரவெல்லாம் வனத்தில் தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், கிராமத்தில் கிணறு ஒன்றில் இருந்து 16 நாள் குழந்தையின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குழந்தையின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குரங்குகளின் அட்டகாசத்தைக் குறைக்க ஏற்கெனவே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே குழந்தையை குரங்கு தூக்கிச் சென்றதா? இல்லை வேறு யாரேனும் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Label