OUR CLIENTS
ஆந்திர காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து ஆம்பூர் வனப்பகுதிகளில் உலாவும் அனுமன்மந்தி இன குரங்குகள்
ஆந்திர காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து ஆம்பூர் வனப்பகுதிகளில் உலாவும் அனுமன்மந்தி இன குரங்குகள் Posted on 02-Apr-2018 ஆந்திர காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து  ஆம்பூர் வனப்பகுதிகளில் உலாவும் அனுமன்மந்தி இன குரங்குகள்

ஆம்பூர், ஏப்.2-
ஆந்திர காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து ஆம்பூர் அருகே உள்ள வனப்பகுதிகளில் அனுமன்மந்தி இன குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட காப்பு காடுகளில் மான்கள், மலைபாம்புகள், யானை, சிறுத்தை, காட்டு பன்றிகள் அதிகளவில் வசித்து வருகின்றன. தற்போது புதுவரவாக அதிகளவில் அனுமன்மந்தி இன குரங்குகள் காணப்படுகின்றன.

ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சியில் உள்ள பொன்னபல்லி கிராமத்தையொட்டி சின்னதுருகம், பெரியதுருகம், பரமேரிகொல்லை, இடையன்கல், செட்டேரி வனப்பகுதிகளில் அதிக அளவிலான அனுமன்மந்தி இன குரங்குகள் காணப்படுகின்றன.

தற்போது இந்த காடுகளில் உள்ள நீர்நிலைகளில் குறிப்பாக செட்டேரி, பரமேரிகொல்லை கிணறு, தேன்கல்கானாறுஜ், மாடு ஊட்டல் சுனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவில் நீர் நிரம்பி காணப்படுவதாலும், இந்த இடங்கள் பசுமையுடன் காணப்படுவதாலும் இவ்வகை குரங்குகள் ஆந்திர மாநில காடுகளில் இருந்து இடம் பெயர்ந்துள்ளன.

இந்த குரங்குகள் வருகையால் அங்கு வசித்து வந்த இதர குரங்குகள் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டன. எனவே, இந்த குரங்குகளை வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label