OUR CLIENTS
முதல்வர் யாரிடமும் ஏமாற வேண்டாம்! யாரையும் ஏமாற்றவும் வேண்டாம்!!
முதல்வர் யாரிடமும் ஏமாற வேண்டாம்! யாரையும் ஏமாற்றவும் வேண்டாம்!! Posted on 02-Apr-2018 முதல்வர் யாரிடமும் ஏமாற வேண்டாம்!  யாரையும் ஏமாற்றவும் வேண்டாம்!!

சென்னை, ஏப்.2-
காவிரி விவகாரத்தில் முதல்வர் யாரிடமும் ஏமாறவும் வேண்டாம், யாரையும் ஏமாற்றவும் வேண்டாம் என திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காவிரி விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, முதல்வர் சுய ஆறுதலுக்காக 6 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். காவிரி விவகாரத்தில் அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதற்கு தன்னிச்சையாக கொடுத்திருக்கும் வாக்குமூலமே அறிக்கை. ஆட்சியாளர்களின் கண்துடைப்புதான் மக்களவையில் அதிமுகவினர் நிகழ்த்திய நாடகம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. 

காவிரி பிரச்சனையில் அனுபவமிக்க வழக்கறிஞர்களை அமர்த்தி மத்திய அரசின் மனுவை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய நடவடிக்கை தேவை. காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கும் வகையில் வாதிட வேண்டும். விழித்திருந்தபோதே குதிரைகள் கனவுபோக அனுமதித்துவிட்டு, பின்னர் ஒப்புக்காக லாபத்தைப் பூட்டும் பயனற்ற செயலை செய்ய வேண்டாம். ஒரு பயனுமற்ற காரியத்தை மீண்டும் மீண்டும் செய்து, மக்களின் எரிச்சலுக்கும், நகைப்புக்கும் ஆளாக வேண்டாம். இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

Label