OUR CLIENTS
தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் ஜாக்டோ-ஜியோ
தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் ஜாக்டோ-ஜியோ Posted on 02-Apr-2018 தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் ஜாக்டோ-ஜியோ

சென்னை, ஏப்.2-
மே 8-ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அந்த அமைப்பின் உயர்மட்டக்குழுக் கூட்டம், சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்தில், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், வருகிற 23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் செய்வது என்றும், அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்து போராட்டம் குறித்து விளக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Label