OUR CLIENTS
சசிகலாவிடம் மறைமுகமாக எம்எல்ஏக்கள் பலர் ஆறுதல்!
சசிகலாவிடம் மறைமுகமாக எம்எல்ஏக்கள் பலர் ஆறுதல்! Posted on 02-Apr-2018 சசிகலாவிடம் மறைமுகமாக எம்எல்ஏக்கள் பலர் ஆறுதல்!

தஞ்சாவூர், ஏப்.2-
புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் இறந்ததையொட்டி பரோலில் வந்த சசிகலா 31ம் தேதி காலை பெங்களூருக்கு காரில் புறப்பட்டார்.

ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பலர் மறைமுகமாக சசிகலாவிடம் பேசி ஆறுதல் கூறினர். புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் கடந்த 20ம் தேதி அதிகாலை சென்னையில் இறந்தார். கணவர் இறந்த தகவல் அறிந்த சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளியில் வந்தார். அவர் காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அதே நேரத்தில் நடராஜன் உடலை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் தஞ்சைக்கு 20ம் தேதி இரவு வந்தடைந்தது. மறுநாள் 21ம் தேதி மாலை நடராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்பிறகு தஞ்சையில் சசிகலா தங்கியிருந்தார். அவரை வைகோ உள்ளிட்ட பல கட்சி பிரமுகர்கள் வந்து சந்தித்து ஆறுதல் கூறினர்.நடராஜனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சையில் உள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் கடந்த 30ம் தேதி நடந்தது. 31ம் தேதி காலை 8.30 மணிக்கு தஞ்சையில் இருந்து பெங்களூருக்கு சசிகலா காரில் புறப்பட்டார்.
முன்னதாக திருச்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் நேரு, ஒரத்தநாடு எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சசிகலாவை பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். 

இதுபற்றி தினகரன் கூறுகையில், 15 நாட்கள் பரோல் கேட்டோம். ஆனால் 10 நாட்கள்தான் பரோல் கிடைத்தது. ஆகவே சசிகலா இன்று (31ம் தேதி) பெங்களூரு சிறைக்கு புறப்பட்டார். நடராஜனின் நெருங்கிய நண்பராக முன்னாள் அமைச்சர் நேரு இருந்து வந்தார். நடராஜன் இறந்த அன்று நேரு வர முடியவில்லை. ஆகவே அவர் சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பலர் மறைமுகமாக சசிகலாவிடம் பேசி ஆறுதல் கூறினர். தங்கள் பதவி பறிபோய் விடும் என்பதற்காக அவர்கள் நேரிடையாக சசிகலாவை சந்திக்கவில்லை என்றார்.

Label