OUR CLIENTS
போராட்டம் காரணமாக மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை
போராட்டம் காரணமாக மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை Posted on 02-Apr-2018 போராட்டம் காரணமாக மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை

சென்னை, ஏப்.2-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டம் காரணமாக, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. போராட்டம் நடத்துவதை தடுக்கும் வகையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 500-க்கும் மேற்பட்ட போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  கடற்கரை உள் சாலையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மெரீனா கடற்கரைக்கு வந்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெரினா கடற்கரையில் ஏராளமானோர் நடைபயிற்சிக்கு வருவது வழக்கம். நேற்று காலை மெரினா கடற்கரைக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கடற்கரையை ஒட்டிய பிளாட்பாரத்திலேயே அவர்கள் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.
இதனிடையே, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பலத்த பாதுகாப்பையும் மீறி போராட்டம் நடைபெற்றதை அறிந்த போலீசார், அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காவல்துறை இணை ஆணையர் அன்புசெழியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: போராட்டம் நடத்துவதற்காக சென்னையில் சில இடங்களுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அந்த குறிப்பிட்ட இடங்களில், காவல்துறையின் முன் அனுமதி பெற்று, மக்கள் தங்கள் கருத்துகளைக் கூறலாம், போராட்டம் நடத்தலாம். ஆனால், மெரினா கடற்கரை பகுதிகளில் ஆர்ப்பாடம் நடத்த அனுமதியில்லை. விதிகளை மீறி மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினால், யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்று அன்பு கூறினார்.

இந்நிலையில், குடும்பத்துடன் வருபவர்கள் மட்டுமே மெரினா கடற்கரைக்குள் செல்ல காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். கருப்பு சட்டை அணிந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர், கருப்பு சட்டை அணிந்து, தனி நபராக வருபவர்களை மெரினாவில் நுழைய அனுமதிக்கவில்லை, அவர்கள் நடைபாதையில் மட்டுமே நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Label