OUR CLIENTS
பரபரப்பான சூழலில் ரஷ்யா செல்லும் நிர்மலா சீத்தாராமன்
பரபரப்பான சூழலில் ரஷ்யா செல்லும் நிர்மலா சீத்தாராமன் Posted on 02-Apr-2018 பரபரப்பான சூழலில் ரஷ்யா செல்லும் நிர்மலா சீத்தாராமன்

மாஸ்கோ, ஏப்.2-
ரஷ்யாவுடனான மேற்கத்திய நாடுகளின் மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில் ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் நாளை (ஏப்ரல் 3-ம் தேதி) மாஸ்கோ நகருக்கு செல்கிறார்.

பிரிட்டன் நாட்டில் முன்னாள் உளவாளியை ரஷ்யா கொல்ல முயன்ற குற்றச்சாட்டையடுத்து, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள சுமார் 20 நாடுகளும் ரஷ்ய நாட்டு தூதர்களை வெளியேற்றியுள்ளன.

இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் எதிர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரிட்டன் நாட்டில் முன்னாள் உளவாளியை ரஷ்யா கொல்ல முயன்றதாக பழி போடுவது தொடர்பாக 23 நாடுகளின் தூதர்கள் கூறிய விளக்கம் திருப்தி அளிக்காததால் அவர்களை உடனடியாக வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுடனான மேற்கத்திய நாடுகளின் மோதல் போக்கு அதிகரித்துவரும் நிலையில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாளை (ஏப்ரல் 3-ம் தேதி) மாஸ்கோ நகருக்கு செல்கிறார்.

வரும் 5-ம் தேதிவரை இங்கு தங்கியிருக்கும் நிர்மலா சீத்தாராமன் சர்வதேச பாதுகாப்பு தொடர்பாக மாஸ்கோ நகரில் நடைபெறும் சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்கிறார். ரஷ்ய நாட்டின் ராணுவ அமைச்சர் செர்கெய் ஷோய்கோ மற்றும் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து இந்தியா&ரஷ்யா இடையிலான பாதுகாப்பு மற்றும் ராணுவத்துறை ஒருங்கிணைப்பை  மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என மாஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Label