OUR CLIENTS
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது Posted on 02-Apr-2018 ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது

தூத்துக்குடி, ஏப்.2-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி&மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக  தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய, ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தது.  ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். ஆலை விரிவாக்கத்தை தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியும், வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடியும் இந்த போராட்டம் நடந்தது.  இந்த போராட்டம் நேற்றுடன் 48வது நாளை அடைந்தது. தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. மக்களின் தன்னெழுச்சியான இந்த பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக் குழுவினர் அழைத்தால் பங்கேற்பேன் என்று கமல் ஏற்கெனவே கூறியிருந்தார். இதையடுத்து அந்த போராட்டக் குழுவினர் கமலை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.  அதன்பேரில் அவர் நேற்று போராட்ட களத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு விடுத்து அதன்படி கலந்து கொண்டார். 

அந்த போராட்டத்தில் மக்களுடன் மக்களாக கமல் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன். நான் தமிழன், உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்ட உணர்வு இது. எங்கெல்லாம் என் குரல் கேட்குமோ அங்கெல்லாம் இதைப்பற்றி குரல் எழப்புகிறேன்.

தூத்துக்குடியில் ஒலிக்கும் குரல் மத்திய அரசிற்கு கேட்க வேண்டும். இங்கு இருக்கும் அரசுக்கு கேட்ட மாதிரியே தெரியவில்லை. உங்கள் மூச்சு பட்ட இந்த வேப்பமரத்து காற்று எனக்கு புது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தந்துள்ளது. என தூத்துக்குடியில் மக்கள் சந்திப்பில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை வியாபார பேராசையின் கோர முகம். தொழிற்சாலை நடத்துபவர்கள் அரசியல்வாதிகளுக்கு ரூ.8000 கோடி லஞ்சம் கொடுத்துவிட்டதாக தகவல்கள் எனக்கு வந்துள்ளன என்றார். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மக்களின் உயிரை விட காப்பர் வியாபாரம் முக்கியம் என நினைக்க வேண்டுமா? அப்படி எனில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தான் நல்லது. குடியிருப்பு, விவசாய பகுதிகளில் ஆலை அமைப்பது தவறு.

மத்திய அரசும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் பாராமுகமாக நடந்து கொள்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்வேன். நான் புதிதாக விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை, ஐந்து வயதில் இருந்தே எனக்கு விளம்பரத்திற்கு பஞ்சம் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் என்றும் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று குறிப்பிட்டார். அப்போது அவரை பேச விடாமல் ரசிகர்கள் கைதட்டிக் கொண்டே இருந்தார்கள். இன்னும் சிலர் சத்தமாக கூச்சல் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

இதையடுத்து கமல் பாதியில் தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கூறினார். பேசுவது எல்லோருக்கும் கேட்கவேண்டும், அமைதியாக இருங்கள் என்று கூறினார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கமல் “என்னுடைய ரசிகர்களிடம் செல்லாமாக கோபப்பட எனக்கு உரிமை இருக்கிறது. அவர்களை நல்ல வழியில் கொண்டு செல்ல எனக்கு உரிமை இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.

Label