OUR CLIENTS
மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி நெல்லையில் கைது
மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி நெல்லையில் கைது Posted on 02-Apr-2018 மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி நெல்லையில் கைது

திருநெல்வேலி, ஏப்.2-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருநெல்வேலியில் மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி உள்பட 200க் கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்காத அதிமுக அரசை கண்டித்து சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மாநில திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் திருநெல்வேலி சந்திப்பில் அண்ணா சிலை அருகில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

கனிமொழியுடன் மறியலில் ஈடுபட்ட கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மு. அப்துல்வஹாப், இரா. ஆவுடையப்பன், சிவ. பத்மனாபன், பேரவை உறுப்பினர் கள் டி.பி.எம். மைதீன்கான், ஏ.எல்.எஸ். லட்சுமணன் உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மணிநேரத்திற்கு பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Label