OUR CLIENTS
அரசு மருத்துவ கல்லூரியில் டெலி மெடிசின் துவக்கம்
அரசு மருத்துவ கல்லூரியில் டெலி மெடிசின் துவக்கம் Posted on 02-Apr-2018 அரசு மருத்துவ கல்லூரியில் டெலி மெடிசின் துவக்கம்

நாகர்கோவில், ஏப்.2-
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டெலி மெடிசின் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையிலும், குமரிமாவட்ட மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலும், ஆசாரிபள்ளம்  அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டெலி மெடிசின் திட்டத்தை  விஜயகுமார்  எம்.பி., துவக்கி வைத்தார்.

மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிதாக 5 டயாலிசிஸ் யூனிட்கள்,  விபத்து சிகிச்சை பிரிவில் தரம்  உயர்த்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவற்றையும்  திறந்து வைத்தார். ரூ. 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் கண் சிகிச்சை பிரிவு பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் எம்.பி., தெரிவிக்கையில், குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில்  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உதவியுடன் டெலிமெடிசின் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் உயர்தர சிகிச்சைகளை பெறமுடியும். இதன் மூலம் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி  டெல்லி எய்ம்ஸ் மற்றும் பிற சிறந்த   ஆஸ்பத்திரிகளுடன்  செயற்கைக்கோள் வழியாக இணைக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில்  உள்ள நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை குறித்த ஆலோசனைகளை சிறந்த டாக்டர்களை தொடர்பு கொண்டு பெறமுடியும். மேலும் கூடுதலாக 5 புதிய டயாலிசிஸ் யூனிட்கள் தொடங்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரியில்  பணம் செலவு செய்து பெறும் சிகிச்சையை இங்கு இலவசமாக பெறமுடியும். தற்போது தினந்தோறும் 40 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கமுடியும். விபத்து சிகிச்சை பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கு தரம்  உயர்த்தப்பட்டதன்மூலம் விபத்தில் காயமடைந்து அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சைக்கான  தாமதத்தை தவிர்த்து உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வராஜ்,  டாக்டர்கள், செவிலியர்கள்  ஊழியர்கள் உடனிருந்தனர்.

Label