OUR CLIENTS
அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு!
அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு! Posted on 02-Apr-2018 அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

வேலூர், ஏப்.2- 
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் மற்றும் மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 28 விளையாட்டு விடுதிகள், 2 சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 முதன்மை நிலை விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.   

மாணவியருக்கான விளையாட்டு விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 02.05.2018 முதல் 04.05.2018 வரை நடைபெற உள்ளது. 

மாணவர்களுக்கான விளையாட்டு: 1. தடகளம் 2. இறகுப்பந்து 3. கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கிரிக்கெட் 6. கால்பந்து 7. வாள்சண்டை 8. ஜிம்னாஸ்டிக்ஸ் 9. கைப்பந்து 10. ஹாக்கி 11. நீச்சல் 12. டேக்வோண்டோ 13. வாலிபால் 14. பளூதூக்குதல் 15.கபாடி 16. மேசைப்பந்து 17. டென்னிஸ் 18. ஜீடோ 19. ஸ்குவாஷ் மற்றும் 20.வில்வித்தை
மாணவிகளுக்கான விளையாட்டு: 1. தடகளம் 2. இறகுப்பந்து 3. கூடைப்பந்து 4. குத்துச்சண்டை 5. கால்பந்து 6. வாள்சண்டை 7. கைப்பந்து 8. ஹாக்கி 9. நீச்சல் 10. டேக்வோண்டோ 11. வாலிபால் 12. பளூதூக்குதல் 13.கபாடி 14. டென்னிஸ் மற்றும் 15. ஜீடோ மற்றும் 16. ஸ்குவாஷ்
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ / மாணவியர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2018-&-2019 வருட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்திடவும், விளையாட்டு விடுதி சார்பான விவரங்களை  
www.sdat.tn.gov.in  என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் 20.04.2018க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Label