OUR CLIENTS
உச்சத்தை எட்டிய பெட்ரோல்&டீசல் விலை
உச்சத்தை எட்டிய பெட்ரோல்&டீசல் விலை Posted on 02-Apr-2018 உச்சத்தை எட்டிய பெட்ரோல்&டீசல் விலை

 புதுடெல்லி, ஏப்.2-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடும் சரிவை சந்தித்துள்ள வேளையில் இந்தியாவில் பெட்ரோல் விலை கடந்த நான்காண்டுகளுக்குப் பின்னர் நேற்று உச்சத்தை எட்டியது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது. அன்றிலிருந்து தினந்தோறும் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டேதான் செல்கின்றது. நாளொரு உயர்வும், பொழுதொரு அதிகரிப்புமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களை வைத்துள்ள நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

குறிப்பாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கடும் சரிவை சந்தித்துள்ள வேளையில் இந்தியாவில் நேற்று பெட்ரோல் விலை நான்காண்டுகள் காணாத உச்சத்தை எட்டியுள்ளது.    இந்நிலையில், டெல்லி நிலவரப்படி நேற்றைய பெட்ரோலின் விலை 18 காசுகள் உயர்ந்து, லிட்டர் ரூ.73.73 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், டீசல் விலையும் 18 காசுகள் உயர்ந்து ரூ.64.58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Label