OUR CLIENTS
நம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக கொண்டுவந்தால் காங். ஆதரிக்க தயாரா?
நம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக கொண்டுவந்தால் காங். ஆதரிக்க தயாரா? Posted on 02-Apr-2018 நம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக கொண்டுவந்தால் காங். ஆதரிக்க தயாரா?

சென்னை, ஏப்.2-
 காவிரி விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொண்டுவந்தால் அதை ஆதரிக்க காங்கிரஸ் கட்சி தயாரா? என நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியார்களிடம் கூறியதாவது: காவிரி வாரிய விவகாரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்தால் ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 

காவிரி விவகாரத்தில் அனைத்து மக்களும் இணைந்து மக்கள் இயக்கமாக போராட வேண்டும்.  காவிரி போராட்டம், மக்கள் போராட்டமாக இருக்க வேண்டும்.  ஜல்லிக்கட்டுக்காக லட்சக் கணக்கில் கூடிய மக்கள் எப்படி போராடினார்களோ அது போல காவிரிக்காவும் போராட வேண்டும்.

அதிமுகவுக்கு என்று தனிக்கொள்கை உள்ளது. மக்கள் நலனுக்காக செயல்படும் அரசு அதிமுக அரசு. மாநில அரசு வேறு, மத்திய அரசு வேறு. அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியலுக்காகவே திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதியளிக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம். நாடாளுமன்றத்தில் எங்களுடையை போராட்டம் தொடரும். 
இவ்வாறு, மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை நேற்று செய்தியாளர்களிடம்  கூறினார்.

Label