OUR CLIENTS
கூட்டுறவு தேர்தலால் அ.தி.மு.க. உண்ணாவிரத தேதி மாற்றம்
கூட்டுறவு தேர்தலால் அ.தி.மு.க. உண்ணாவிரத தேதி மாற்றம் Posted on 02-Apr-2018 கூட்டுறவு தேர்தலால் அ.தி.மு.க. உண்ணாவிரத தேதி மாற்றம்

குள்ளனம்பட்டி, ஏப்.2-
 கூட்டுறவு சங்க தேர்தலுக்காக உண்ணாவிரத தேதியை அ.தி.மு.க .வினர் மாற்றியுள்ளதாக தங்க தமிழ் செல்வன் கூறினார். 

திண்டுக்கல் வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பா.ஜ.க. அரசு மைனாரிட்டி அரசாக இருப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதை தவிர்க்க அ.தி.மு.க. அரசு நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறது. காவிரி பிரச்சினையை திசை திருப்புகின்றனர். நான் அடிப்பது போல் அடிக்கின்றேன். நீ அழுவது போல் அழு என்பது போல பா.ஜ.க. அரசிடம் அனுமதி பெற்றுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு ஸ்கீம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இதனால் அவ மதிப்பு செல்லாது. எனவே தமிழக மக்களின் ஜீவாதாரண பிரச்சினையான காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சினையாக காவிரி நதி நீர் பிரச்சினை இருக்கையில் கூட்டுறவு சங்க தேர்தலில் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காகவே உண்ணாவிரதத்தை 2-ம் தேதியில் இருந்து 3-ந் தேதிக்கு மாற்றியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Label