OUR CLIENTS
புதுச்சேரி,காரைக்காலில் ஏப்.11ல் முழு அடைப்பு பொது நல அமைப்புகள் அறிவிப்பு!
புதுச்சேரி,காரைக்காலில் ஏப்.11ல் முழு அடைப்பு பொது நல அமைப்புகள் அறிவிப்பு! Posted on 02-Apr-2018 புதுச்சேரி,காரைக்காலில் ஏப்.11ல் முழு அடைப்பு பொது நல அமைப்புகள் அறிவிப்பு!

புதுச்சேரி, ஏப். 2-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்காலில் ஏப்ரல் 11-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துப் பொது நல அமைப்புகள் அறிவித்தன.

 புதுச்சேரி பல்வேறு சமூக அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலர் கோ.அ.ஜெகன்நாதன் தலைமை வகித்தார். பின்னர்,அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை மார்ச் 29-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உத்தரவிட்டது. காரைக்கால் பகுதிக்கு 7 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்காமல், தீர்ப்பை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அதேபோல, கர்நாடக காங்கிரஸ் அரசும் தீர்ப்பை மதிக்காமல் அவமதித்து வருகிறது. மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு, புதுவை அரசு ஆகியவை உரிய வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை.

 எனவே, மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து, ஏப்ரல் 11-ஆம் தேதி புதுச்சேரி, காரைக்காலில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

 இந்த முழு அடைப்புப் போராட்டதுக்கு வணிகர்கள்,பேருந்து உரிமையாளர்கள், கல்வி நிறுவனங்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்றார் அவர்.

 கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்க மாநிலத் தலைவர் அழகிரி, திராவிடர் விடுதலைக் கழக மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலர் சுகுமாரன், தமிழர் களம் செயலர் அழகர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கப் பொதுச் செயலர் தெய்வீகன்,  புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் சடகோபன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், தலித் சேனா தலைவர் பாலசுந்தரம், செம்படுகை நன்னீரகம் தலைவர் ராமமூர்த்தி, இந்திய மக்கள் சக்தி இயக்கத் தலைவர் அரிகிருஷ்ணன், மக்கள் மன்றத் தலைவர் நாராயணசாமி, கிராமப்புறச் சுற்றுச்சூழல் இயக்கத் தலைவர் குமரவேல் உள்பட 20-க்கும் மேற்பட்ட சமூக, ஜனநாயக இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Label