OUR CLIENTS
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையேயான சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கத் திட்டம்!
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையேயான சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கத் திட்டம்! Posted on 02-Apr-2018 விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையேயான சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கத் திட்டம்!

விழுப்புரம், ஏப்.2-
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையான 180 கி.மீ சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் வழியாக செல்லும் இச்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. மத்திய அரசின் சாகர்மாலா திட்டம் -1, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்-5 ஆகிய திட்டங்களின் கீழ் இச்சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியது

பாரத் மாலா திட்டம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டம் மூலம் ரூ.5,916.95 கோடி மதிப்பில் நான்கு கட்டங்களாக விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையேயான சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யவுள்ளோம். முதற்கட்டமாக 123 கி.மீ. தொலைவுக்கு புதுச்சேரி, பூண்டியாங்குப்பம் வழியாக விழுப்புரத்திலிருந்து சட்டநாதபுரம் வரையில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியுள்ளது. இதற்காக ரூ.4,446.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே 29 கி.மீ. தொலைவும், புதுச்சேரி-பூண்டியாங்குப்பம் இடையே 38 கி.மீ தொலைவும், பூண்டியாங்குப்பம்-சட்டநாதபுரம் இடையே 56 கி.மீ தொலைவும் உள்ள சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.
எஞ்சிய சட்டநாதபுரம்-நாகப்பட்டினம் இடையேயான 56.56 கி.மீ தொலைவு உள்ள சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. இத் திட்டத்துக்காக ரூ.1,470.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டப்பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இந்த திட்டத்தில் சில இடங்களில் மேம்பாலங்கள், ரயில்வே பாலங்கள் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Label