OUR CLIENTS
போலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்
போலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள் Posted on 02-Apr-2018 போலி சான்றிதழ்கள் கொடுத்து பாம் ஸ்குவாட் பணியில் சேர்ந்துள்ள மலையாளிகள்

சென்னை, ஏப்.2-
தமிழகத்துக்கு கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி சென்னை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு வருகை தந்தார் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி. அப்போது எதிர்பாராத விதமாக மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்துக்கு பிறகு கிடைத்த மாபெரும் வெற்றியால் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா பல திருத்தங்களை கொண்டு வந்தார். இந்தியாவின் அதிமுக்கிய (விவிஐபி) பிரமுகர்களின் தமிழக வருகையின் போது பாதுகாப்பு நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர் குழு உள்துறை அமைக்கும் வகையில் செயலாளராக இருந்த மலைச்சாமி ஐஏஎஸ் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தார். 

தமிழக அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் தமிழ்நாடு வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த பாம் ஸ்குவாடில் இடம்பெற்றுவதற்கான தகுதிகள் , தேர்வு செய்யும் முறை, அதற்கான கமிட்டி உறுப்பினர்கள், ஸ்குவாடில் செயல்முறைகள், சம்பளம் என்பது உள்பட பல்வேறு விதிகளுடன் இரண்டு அரசாணையை (எண்:2037, 2038) கடந்த 15.12.1992ல் மலைச்சாமியின் கையொப்பத்துடன் போடப்பட்டன. உள்துறையின் கீழ் செயல்படும் இந்த ஸ்குவாடு, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மாநில ஆளுநர்கள், வெளிநாட்டு தலைவர்கள், தூதர்கள் என தமிழகம் வரும் அதிமுக்கியமானவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பயன்பட்டு வருகிறது.

இந்த ஸ்குவாடில் தற்போதுள்ள சர்ச்சைகள் குறித்து விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம். இந்திய ராணுவத்தில் எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் மட்டுமே பாம் ஸ்குவாடு இருப்பதை அறிந்து அவர்களை பயன்படுத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முடிவெடுத்தது.
அவர்களும்கூட ஹரியானாவில் உள்ள நேஷனல் செக்யூரிட்டி கார்டு பயிற்சி மையம், டெல்லியிலுள்ள பியூரோ ஆஃப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மையம், புனேயில் இருக்கும் காலேஜ் ஆஃப் மிலிட்டரி இன்ஜினியரிங் இந்த மூன்றில் ஒன்றில் பயிற்சி எடுத்து சான்றிதழ் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்கிற இந்திய ராணுவ முறையே தமிழ்நாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என அரசாணையும் போடப்பட்டது.

ராணுவத்திலோ, ஐபியிலோ பாம் ஸ்குவாடு பிரிவில் மூன்று ஆண்டு அனுபவமும் கட்டாயம். இந்த பிரிவு உருவாக்கப்படும் போது, 181 இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தமிழக அரசின் இப்பிரிவில் தற்போது தமிழகம் முழுவதும் 120 பேர்கள்தான் பணியாற்றுகின்றனர். சென்னையில் மட்டும் 60 பேர்  பாம் ஸ்குவாடு டெக்னீஷியன்களை இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள்ஸ், கான்ஸ்டபிள்ஸ் என 4 நிலையில் தரம் பிரித்துள்ளனர். முக்கிய பிரமுகர்கள் சென்னைக்கு வந்து திரும்பிச் செல்லும் வரை அனைத்து வகையிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேயட்ய மிகவும் சென்சிடிவ்வான பணியில் இருக்கும் வெடிகுண்டு நிபுணர்களை தேர்வு செய்வதில்தான் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு என்று சொல்லப்படுகிறது. 

பாம் ஸ்குவாடு பிரிவில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்ப தமிழகத்தில் இருக்கும் முன்னாள் ராணுவத்தினரில் இருந்துதான் தகுதியானவர்களை எடுக்க வேண்டும். மற்ற மாநிலத்தவரை எடுக்க கூடாது. ஆனால் சமீப ஆண்டுகளாக கேரளாவை சேர்ந்த மலையாளிகளை தேர்வு செய்வது அதிகம் நடக்கிறது. இன்றைய சூழலில் பாம் ஸ்குவாடில் இருக்கும் டெக்னீஷியன்களில் 50 சதவீதம் பேர் மலையாளிகள்தான்.
இந்த பிரிவின் உயரதிகாரியாக இருந்து பணி ஓய்வுபெற்ற மலையாளி ஒருவர் கேரளாவில் இருந்தபடி தமிழக பாம் ஸ்குவாடுக்கு கேரளாவில் உள்ள முன்னாள் ராணுவத்தினரை அனுப்பி மேலரதிகாரிகள் மூலம் செலக்ட்டாக வைக்கிறார். இதற்காகவே கோவை பாம் ஸ்குவாடில் இருக்கும் தனது சிஷ்யரை புரோக்கராக வைத்துள்ளாராம். ஒவ்வொரு பணி நியமனமும் ரூ.3 லட்சத்துக்கு விற்கப்படுகிறதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராணுவத்தில் டிஎஸ்பி கேடரில் இருந்த மலையாளி ஒருவர் இங்கு இன்ஸ்பெக்டராக பணியில் சேர்கிறார். காரணம், ராணுவத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறதாம். இங்கோ ரூ.55 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறதாம். இப்படி தேர்வு செய்யப்படுகிற மலையாளிகளில் பெரும்பாலானவர்களது கல்வி சான்றிதழ்கள் போலியானது என்ற அதிர்ச்சி தகவல் பேரிடியாக பரவி வருகிறது. சான்றிதழ்களை சரிபார்ப்பது இல்லை என்பதால் பல போலிகள் பாம் ஸ்குவாடில் உலா வர ஆரம்பித்து விட்டனர். தற்போது பாம் ஸ்குவாடில் உள்ளவர்களின் சான்றிதழ்களை மத்திய அரசு அனுமதித்திருக்கும் 3 பயிற்சி மையங்களில் பரிசோதித்தால் அவை போலியானவை என்பது தெரியவரும். அனுபவமற்ற போலிகளால் விஐபிக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது என்ற பகீர் தகவல் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து இப்பிரிவை கவனிக்கும் உயரதிகாரியான ஏடிஜிபி(ஆபரேஷன்) ஆசிஷ் பங்க்ராவுக்கும், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டிக்கும் உள்துறையை வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் புகார் அனுப்பி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மைனஸ் பாயின்ட்டாகும். முதல்வரின் நேரடி கவனிப்பில் உள்ள உள்துறையில் இப்படியொரு நிலை நிலவுவது பாதுகாப்பில் பேராபத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் எக்காரணத்துக்காக இந்த துறையை அமைத்தாரோ அதற்கு நேர்மறையாக துறை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தலைவர்களுக்குதான் ஆபத்து என ஆதங்கத்தோடு வெடிக்கின்றனர் இந்த உண்மைகளை அறிந்த நேர்மையான பாம் ஸ்குவாடு அதிகாரிகள். ஆதலால் போர்க்கால அடிப்படையில் பாம் ஸ்குவாடில் உள்ள கேரள மலையாளிகளை அடியோடு ஒருவர் கூட இல்லாமல் அப்புறப்படுத்திவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதோடு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கடமை உணர்வுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட முன்வர வேண்டும். இல்லையெனில் இதே நிலை தொடர்ந்தால் ஆண்டவனாலும் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும்.

ஏன் தமிழகம் சுடுகாடாக கூட மாறும் பேரபாயமும் நிகழ வாய்ப்புள்ளது என்பதை எடப்பாடி அரசு மறந்துவிடக்கூடாது. ஆதலால் இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு பணியமர்த்தப்பட்ட மலையாளிகளை அப்புறப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பாம் ஸ்குவாடு அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label