OUR CLIENTS
கர்நாடகாவில் அமித்ஷா நிதியுதவி தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்
கர்நாடகாவில் அமித்ஷா நிதியுதவி தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார் Posted on 02-Apr-2018 கர்நாடகாவில் அமித்ஷா நிதியுதவி தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்

பெங்களுரு, ஏப்.2-
பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவை கர்நாடகத்திற்குள் விடக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் விடுத்துள்ள கோரிக்கை மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமித்ஷா 2016ம் ஆண்டு கொல்லப்பட்ட ராஜீவ் என்ற தொண்டரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ், தேர்தல் விதிகளை மீறியுள்ள அமித்ஷாவை கர்நாடகத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. 
இதனிடையே கர்நாடகாவில் காங்கிரசிடமிருந்து இருந்து ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பாரதிய ஜனதா, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரம்மோத தேவி வாடியாரை நேரில் சந்தித்து தேர்தலில் நிற்க அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை அரச குடும்பம் ஏற்கவில்லை என தெரிகிறது. 

Label