OUR CLIENTS
நான் டிஜிபியின் மகள் தெரியுமா? மெரினாவில் போலிசை மிரட்டும் பெண்
நான் டிஜிபியின் மகள் தெரியுமா? மெரினாவில் போலிசை மிரட்டும் பெண் Posted on 03-Apr-2018 நான் டிஜிபியின் மகள் தெரியுமா?  மெரினாவில் போலிசை மிரட்டும் பெண்

சென்னை, ஏப்.3-

 மெரினாவில் சொகுசு காரில் வலம் வந்த பெண் ஒருவர், தன்னிடம் விசாரணை நடத்திய போலிசிடம், நான் டிஜிபின் மகள் என மிரட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதால், 2 நாட்களுக்கு முன்னர் அங்கு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இவர்களை, போலிசார் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால், மெரினாவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், அங்கு சொகுசு காரில் சுற்றித்திரிந்த கும்பலை போலிசார் அழைத்து விசாரித்துள்ளனர். அதற்கு அந்த கும்பலை சேர்ந்த பெண் ஒருவர், நான், காவல் துறை தலைமை இயக்குநர் டிஜிபி மகள் என்றும் உன்னை இடமாற்றம் செய்யவா? என்றும் கேட்டு மிரட்டியுள்ளார்.  காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Label