OUR CLIENTS
மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து நாடகமாடுகிறார் தமிழிசை சவுந்தரராஜன்
மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து நாடகமாடுகிறார் தமிழிசை சவுந்தரராஜன் Posted on 03-Apr-2018 மு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து நாடகமாடுகிறார் தமிழிசை சவுந்தரராஜன்


திருவண்ணாமலை, ஏப்.3
  
தி.மு.க. மேல் தவறை வைத்துக் கொண்டு மு.க. ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து நாடகமாடுகிறார். காவிரி பிரச்சனைக்கு முழுக்க முழுக்க தி.மு.க. தான் காரணம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-  ஆக்கபூர்வமான அரசியல் வேண்டுமென்று தான் எங்களுடைய கோரிக்கை. எது நடந்தாலும் மக்களுக்கு இடையூறு பிரச்சனைகள் ஏற்படக் கூடாது. தொலை நோக்கு பார்வையுடன் மக்களுக்கு நல்ல திட்டங்கள் இருக்க வேண்டும். அதை நோக்கி தான் மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் பயணிக்கிறது.

எந்த விதத்திலும் உரிமைகளையும், சமூக அந்தஸ்துகளையும் பெற்றுத் தருவதில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் பா.ஜ.க. தான் தீர்த்து வைக்கிறது.  காவிரி பிரச்சனையில் ஸ்டாலின் உள்ளிட்டோர் போராடுகின்றனர். தங்கள் தவறுகளை மறைக்க போராட்டம், ஆர்ப்பாட்டம் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக செய்கின்றனர்.

சட்ட விதிகளுக்குட்பட்டு, சட்ட ரீதியில் தான் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பை வழக்கை தொடர முடியாது. நீதிமன்றமும் அதை ஏற்காது. 1974-ம் ஆணடு சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கை தி.மு.க. வாபஸ் பெற்றதா? இல்லையா?  10 ஆண்டுகள் காங்கிரஸ் துணையுடன் மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அப்போதே அழுத்தம் கொடுத்திருந்தால் இந்த போராட்டம் தேவையில்லை.
தி.மு.க. மேல் தவறை வைத்துக் கொண்டு மு.க. ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து நாடகமாடுகிறார். காவிரி பிரச்சனைக்கு முழுக்க முழுக்க தி.மு.க. தான் காரணம். அதற்கு துணை நின்றது காங்கிரஸ் கட்சி.  காவிரி பிரச்சனைக்காக கனிமொழி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label