OUR CLIENTS
காவிரி விவகாரம் மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை
காவிரி விவகாரம் மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை Posted on 03-Apr-2018 காவிரி விவகாரம்  மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை

புதுடெல்லி,  ஏப். 3

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9-ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.  

 காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை 6 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் தொடர்ந்து மவுனமாக இருந்த மத்திய அரசு, தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு கடைசி நேரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததால், தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை நேற்றே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏப்ரல் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

‘காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது.  தமிழகத்திற்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும்.  தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் குறிக்காது.  காவிரி பிரச்சினையில் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதுதான் ஸ்கீம்’ என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

Label