OUR CLIENTS
பாராளுமன்றத்தில் தொடரும் அதிமுக அமளி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் தொடரும் அதிமுக அமளி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு Posted on 03-Apr-2018 பாராளுமன்றத்தில்  தொடரும் அதிமுக அமளி   மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

 புதுடெல்லி, ஏப்.3-
   
பாராளுமன்றத்தில் நேற்றும் அ.தி.மு.க. மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.  

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி உள்ளன. இக்கூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை காரணம் காட்டி, அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நான்கு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு பாராளுமன்றம் நேற்று காலை 11 மணிக்கு கூடியது. மக்களவையில் காலை முதலே அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளி காரணமாக அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் அறிவித்தார்.

  சி.பி.எஸ்.இ. வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. ஜே.பி.யாதவ் மற்றும் காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதா தேவ் ஆகியோர் நோட்டீஸ் அளித்திருந்தனர். இதேபோல் வங்கி  கடன் மோசடி தொடர்பாக மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு காங்கிரஸ் நோட்டீஸ் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Label