OUR CLIENTS
கொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம்
கொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம் Posted on 04-Apr-2018 கொல்கத்தா – டாக்கா இடையே சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

புதுடெல்லி, ஏப்.4-

கொல்கத்தாவில் இருந்து டாக்கா வரையிலான சரக்கு ரயில் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது என மூத்த அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் கட்டமாக கொல்கத்தாவில் உள்ள மஜ்கர்கத் ரயில் நிலையத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடக்க விழா நடந்தது. அந்த விழாவில் மூத்த அமைச்சக அதிகாரிகள் கொடியசைத்து  கொல்கத்தா-டாக்கா இடையே ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. அதற்காக சரக்கு பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட்டது. அதில் 1,100 டன் எடையுள்ள கால்நடை தீவனங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.  இந்த ரயில் 300 கி.மீட்டர் தூரம் இந்தியாவில் உள்ள சீல்லாதக், நைதாதி, ரானகாட் மற்றும் ஜெடே வழியாகவும், வங்காள தேசத்தில் தர்சனா மற்றும் ஷ்ருர்தி வழியாகவும் செல்லலாம்.இந்த ரயில் சேவை வெற்றி பெற்றால் சரக்கு போக்குவரத்து நேரம் குறையும் என்று மூத்த அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரக்கு ரயில் போக்குவரத்தை கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நடத்தும் என தெரிவித்துள்ளனர்.

Label