OUR CLIENTS
ஜம்மு-காஷ்மீர் நிலவரம் கவலை அளிக்கிறது ஐநா பொதுசெயலாளர் வருத்தம்
ஜம்மு-காஷ்மீர் நிலவரம் கவலை அளிக்கிறது ஐநா பொதுசெயலாளர் வருத்தம் Posted on 04-Apr-2018 ஜம்மு-காஷ்மீர் நிலவரம் கவலை அளிக்கிறது  ஐநா பொதுசெயலாளர் வருத்தம்

ஐ.நா., ஏப்.4-

 ஜம்மு காஷ்மீர் நிலவரம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ கட்டாரெஸ் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மற்றும் சோபியான் மாவட்டங்களில் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகன் அப்பாஸி கடும் கண்டனம் தெரிவித்தார்.

ராணுவத்தினரின் தாக்குதலை தடுக்கும் பொதுமக்களை பெல்லட் குண்டுகள் மூலம் தாக்குவது கொடூரமான செயல் என தெரிவித்தார்.  இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஐநா பொதுசெயலாளர் ஆண்டோனியோ கட்டாரஸ் கவலை தெரிவித்தார். இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்  செய்தியாளர்களிடம் பேசினார்.

ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக ஐநா பொதுசெயலாளர் மிகவும் கவலை அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். மேலும் காஷ்மீர் பிரச்சனைக்கு இருதரப்பு நாடுகளும் அமைதியான வழியில் பேசி தீர்வு காண வேண்டும்.   உலகின் எந்த பகுதியிலும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அது காசா, ஜம்மு காஷ்மீர் அல்லது ஏமன் என எந்த இடமாக இருந்தாலும் அங்குள்ள மக்களை பாதுகாப்பதே ஐநாவின் அடிப்படை கொள்கையாகும் என தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படுமா என ஸ்டீபனிடம் செய்தியாளர்கள் கேட்டப்போது ‘‘பொதுமக்கள் உயிரிழக்கூடிய எந்த சூழ்நிலை குறித்தும் விசாரணை நடத்தப்படும்’’ என ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.  அதேசமயம் ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தற்போது எந்த விவாதமும் நடத்த திட்டமிடவில்லை என ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

Label