OUR CLIENTS
தலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஒப்புக் கொண்ட மத்திய அரசு
தலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஒப்புக் கொண்ட மத்திய அரசு Posted on 04-Apr-2018 தலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஒப்புக் கொண்ட மத்திய அரசு

புதுடெல்லி, ஏப்.4-
 வன்கொடுமை சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து, வடமாநிலங்களில் போராட்டம் நடந்து வரும் நிலையில், 2014 மற்றும் 2016ல் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதை மத்திய அரசு பார்லிமென்டில் ஒப்புக் கொண்டுள்ளது. 

எஸ்சி - எஸ்டி பிரிவினருக்கு எதிரான பாகுபாட்டை தடுப்பதற்காக வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி நேர்மையான அதிகாரிகள் கைது செய்யப்படுவதால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அரசு அதிகாரிகளை கைது செய்வதற்கு தடை விதித்து, மார்ச் 20ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போராட்டங்களின் போது வன்முறை வெடித்து, 9 பேர் உயிரிழந்தனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.  இந்நிலையில், மத்தியில் பாஜ அரசு அமைந்தபிறகு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதை, பார்லிமென்டில் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 

நேற்று லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் கூறியதாவது: மத்தியில் பாஜ அரசு பதவியேற்ற, 2014ல் எஸ்சி பிரிவினருக்கு எதிராக வன்முறை நடந்ததாக, 40,300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இது, 2015ல் 38,564 ஆகக் குறைந்தது. ஆனால் 2016ல் 40,774ஆக உயர்ந்தது.

அதேபோல் எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்முறை தொடர்பாக, 2014ல் 6,788 வழக்குகளும், 2015ல் 6,275 ஆகக் குறைந்து 2016ல் அது, 6,565ஆக உயர்ந்தது. எஸ்சி பிரிவினருக்கு எதிராக 2012ல் 33,593 மற்றும் 2013ல் 39,346 வழக்குகள் பதிவாயின. எஸ்டி பிரிவினருக்கு எதிராக இந்த ஆண்டுகளில் முறையே 5,920 மறறும் 6788 வழக்குகள் பதிவாயின. இவ்வாறு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதில் இருந்து, இந்த வன்கொடுமை சட்டத்தில் விலக்கு அளித்தால், அது மேலும் தவறாகப பயன்படுத்த வாய்ப்புள்ளதையே காட்டுகிறது.

Label