OUR CLIENTS
மாமூல் வசூலிப்பதில் போட்டி.. பிரபல ரவுடி கொலை..!
மாமூல் வசூலிப்பதில் போட்டி.. பிரபல ரவுடி கொலை..! Posted on 04-Apr-2018 மாமூல் வசூலிப்பதில் போட்டி.. பிரபல ரவுடி கொலை..!

சென்னை,  ஏப். 4
சென்னையில் சரித்திர பதிவேட்டு குற்றவாளியான பிரபல ரவுடி முட்டை கோபியை எதிர் கோஷ்டியினர் வெட்டிக் கொலை செய்தனர். எல்லை தாண்டி மாமூல் வசூலித்ததால் தீர்த்திக்கட்டிய ரவுடி கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட ரவுடி முட்டை கோபி மூலக்கடை சந்திப்பில் தேநீர் கடை ஒன்றில் நின்று கொண்டிருந்த போது, 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் வந்து சரமாரியாக அரிவாளால் தாக்கி விட்டு தப்பினர்.  ரத்த வெள்ளத்தில் விழுந்த ரவுடி முட்டை கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட, கொலையாளிகள் குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ரவுடி முட்டை கோபியை கொலை செய்ததது அதே பகுதியை சேர்ந்த ரவுடி செபா என்கிற செபாஸ்டின் என தெரியவந்தது.

உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு ரவுடி செபாஸ்டின் அவனது கூட்டாளிகள் ஓட்டை மணி, கர்க்கா என்கிற கார்த்திக் மற்றும் சிவா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிட்சா என்கிற கிருஷணமூர்த்தி, கொன்னா சீனிவாசன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.   கொலை செய்யப்பட்ட ரவுடி முட்டை கோபி, மணலி சின்ன மாத்தூரை சேர்ந்தவன். 2 கொலை வழக்கு, 7 கொலை முயற்சி உள்ளிட்ட 17 வழக்குகளில் தொடர்புடைய முட்டை கோபி 4 முறை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்கப்பட்டான். கடந்தாண்டு குண்டர் தடுப்பு காவலில் இருந்து வெளியில் வந்த முட்டை கோபி, தான் திருந்தி வாழ்வதாக கூறி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தான்.

பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் பெரம்பூர் பகுதி துணை செயலாளராக பொறுப்பில் சேர்ந்த முட்டை கோபி தனது ரவுடிஸத்தை விடவில்லை என கூறும் காவல் துறையினர், எல்லை தாண்டி வந்து மாமூல் வசூலித்ததால் தான் முட்டை கோபி கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். முட்டை கோபி கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ரவுடி பன்னீருடன் சேர்ந்து கொண்டு மாமூல் கட்ட பஞ்சாயத்து என அடாவடியில் ஈடுப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மாமூல் வசூலித்து வந்த ஏரியா ரவுடியான செபாஸ்டினுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வேறொரு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட செபாஸ்டின் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்கப்பட்டான்.

இந்த சந்தர்ப்பத்தில் முட்டை கோபி, ரவுடி பன்னீர் இருவரது கையும் ஏரியாவில் ஓங்கிவிட, வெளியில் வந்ததும் இருவரையும் தீர்த்துக்கட்ட சிறையில் இருந்தே செபஸ்டின் திட்டமிட்டுள்ளான். அதன்படி கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியில் வந்த செபாஸ்டின் தனது கூட்டாளிகளுடன் திட்டமிட்டது போல் தீர்த்துக் கட்டியுள்ளான் என்கின்றனர் காவல் துறையினர்.

Label