OUR CLIENTS
இளைஞரின் கையை கம்பத்தில் வைத்து உடைக்க முயன்ற போக்குவரத்து போலீசார்
இளைஞரின் கையை கம்பத்தில் வைத்து உடைக்க முயன்ற போக்குவரத்து போலீசார் Posted on 04-Apr-2018 இளைஞரின் கையை கம்பத்தில் வைத்து உடைக்க முயன்ற போக்குவரத்து போலீசார்

சென்னை, ஏப்.4- 

 தியாகராயநகரில் இளைஞர் ஒருவரை போக்குவரத்து போலீசார் அடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், பிரச்சனைக்கு காரணம் இளைஞர் தான் என்பதை விளக்கும் காட்சிகளை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர். 

சாலிகிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ், தமது தாய் மற்றும் சகோதரியை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திநகர் சென்றுள்ளார். போத்தீஸ் பாயிண்ட் அருகே அவர்களை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காகவும், மூன்று பேராக வந்ததற்காகவும் அபராதம் விதித்துள்ளனர். அபராதத்தை செலுத்துமாறு கூறிய போது, பிரகாஷ் தன்னுடைய செல்போனில் போலீசாரை வீடியோ எடுத்துள்ளார். 

செல்போனில் வீடியோ எடுத்ததால் போலீசாருக்கும், பிரகாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஒரு கட்டத்தில் உதவி ஆய்வாளர் ஜெயராமனின் சட்டையை பிடித்துக் கொண்டு விடாமல் பிரகாஷ், முரண்டு பிடித்துள்ளார். இதனால் போக்குவரத்து போலீசார் பிரகாசை கம்பத்தில் பிடித்து வைத்து வைத்து அடித்ததாக கூறி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

ஆனால், உதவி ஆய்வாளர் ஜெயராமனின் சட்டையை பிடித்துக் கொண்டு பிரகாஷ் விட மறுத்த காரணத்தினால், அவரிடம் இருந்து விடுபடவே ஜெயராமன் பிரகாஷை தாக்க நேர்ந்ததாக விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து போலீசார் அதற்கான வீடியோ காட்சியையும் வெளியிட்டுள்ளனர். 

இந்த களேபரத்தில் உதவி ஆய்வாளர் ஜெயராமனின் செல்போன், வாக்கி டாக்கியை பிரகாஷ் கீழே தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள மாம்பலம் காவல்துறையினர், பிரகாசை கைது செய்தனர். 

Label