OUR CLIENTS
அ.தி.மு.க உண்ணாவிரதம் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் வைகோ ஆவேச பேச்சு
அ.தி.மு.க உண்ணாவிரதம் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் வைகோ ஆவேச பேச்சு Posted on 04-Apr-2018 அ.தி.மு.க உண்ணாவிரதம் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம்  வைகோ ஆவேச பேச்சு

தேனி, ஏப்.4-
   
காவிரி மேலாண்மை வாரியத்திற்காக அ.தி.மு.க வினர் நடத்தும் உண்ணாவிரதம் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பொட்டிப்புரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் அமையஉள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ஆண்டிப்பட்டி பகுதிக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அமெரிக்காவின் நிர்பந்தத்தால்தான் நியூட்ரினோ ஆய்வு மையத்தை தொடங்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆய்வு மையம் அமைவதன் மூலம் உலகின் எந்த நாட்டில் உள்ள அணுஆயுதங்களையும் செயல்இழக்க செய்யமுடியும்.

இதனால் அணுயுத்தம் தொடங்கினால் உலகநாடுகள் தாக்கும் முதல் இடமாக பொட்டிபுரம் நியூட்ரினோ ஆய்வு மையம் இருக்கும். இதன்மூலம் தென்னகத்தில் உள்ள 5 மாவட்டங்கள் சாம்பல் காடாக மாறி சுடுகாடாகிவிடும்.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாமல் தமிழகத்தை தேர்வு செய்தது எதற்காக? மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிமையாகிவிட்டது.

மத்திய அரசுக்கு துணைபோகும் தமிழக அரசை வரலாறு என்றும் மன்னிக்காது. எங்களை பொறுத்தவரை தமிழகம் மட்டுமின்றி நியூட்ரினோ ஆய்வு மையம் இந்தியாவின் வேறு எங்கும் தொடங்க கூடாது. தமிழக அரசு தனது சுயமரியாதையை இழந்து மக்களை காவுகொடுக்க தயாராகிவிட்டது.

  ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை நியூட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. தற்போது மத்திய அரசின் நிர்பந்தத்தால் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வரலாற்றில் எட்டப்பர் வரிசையில் சேர்க்கும் நிலை ஏற்படும்.

ஸ்டெர்லைட் பிரச்சனைக்காக கடந்த 32 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தற்போது அந்த ஆலையின் தீமையை உணர்ந்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் எனது நோக்கம் நிறைவேறியதாக உணர்கிறேன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயாராக இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை முழுமையாக படித்து பார்த்தபோது மேலாண்மை வாரியம் அமைப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.  மேனேஜ்மெண்ட் போர்டு அமைக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தமிழகஅரசுக்கு தெரிந்தும் மக்களை ஏமாற்றுவதற்காக உண்ணாவிரதம் நடத்தி நாடகம் ஆடுகின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற நிலை தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்

Label