OUR CLIENTS
தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டுள்ள 213 அவதூறு வழக்குகளின் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டுள்ள 213 அவதூறு வழக்குகளின் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் Posted on 18-Aug-2016 தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டுள்ள 213 அவதூறு வழக்குகளின் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

டெல்லி:
தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டுள்ள 213 அவதூறு வழக்கு களின் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகள் தொடர்பாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தரப்பில் கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் கூறப்பட்டு இருந்ததாவது:

விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுப்பிரமணிய சாமி ஆகியோர், அவதூறு தொடர்பான குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்து உள்ளனர். அந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மனுதாரர்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் கீழ்க் கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளின் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும் இந்த மனுக்களின் மீதான தீர்ப்பு அப்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் வழக்கு தொடர்வது சட்ட நடைமுறைக்கு ஏற்புடையது அல்ல. எனவே, மனுதாரர்கள் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்வதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் விஜயகாந்த், பிரேமலதா மீதான அவதூறு வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த மாத இறுதியில் விசாரணைக்கு வந்த போது, தொடர்ந்து 4 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாத விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதுபற்றி, டெல்லி மாநில தே.மு.தி.க. செயலாளரும், வக்கீலுமான ஜி.எஸ்.மணி கடந்த மாதம் 26-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி, இதற்கு எதிராக முறையிட்டார். இதைத்தொடர்ந்து விஜயகாந்த், பிரேமலதா ஆகியோருடைய மனுக்கள் 28-ந் தேதியன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப்.நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை விதித்தும், அந்த கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக முதல்- அமைச்சர் சார்பில் அரசு வக்கீல் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகள் தொடர்பான பட்டியலை இரண்டு வார காலத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் வக்கீல் யோகேஷ் கன்னா, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்தார்.

இந்த பட்டியலில் 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழக அரசின் தரப்பில் மொத்தம் 213 அவதூறு வழக்குகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள் ளது. அதாவது, தி.மு.க. தலைவர்களுக்கு எதிராக 85 வழக்குகளும், விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட தே.மு.தி.க. கட்சி தலைவர்களுக்கு எதிராக 48 வழக்குகளும், பல்வேறு ஊடகங்கள் மீது 55 வழக்குகளும், பா.ம.க. தலைவர்களுக்கு எதிராக 9 வழக்குகளும், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக 7 வழக்குகளும், சுப்பிரமணிய சாமிக்கு எதிராக 5 வழக்குகளும், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக மொத்தம் 4 வழக்குகளும் தொடரப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த வழக்குகளை தொடர்ந்ததற்கான காரணங்கள், எந்த கோர்ட்டில் இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பன போன்ற விவரங்களும் அந்த பட்டியலில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற செப்டம்பர் 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Label