OUR CLIENTS
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தீ விபத்து - 4 பேர் காயம்
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தீ விபத்து - 4 பேர் காயம் Posted on 04-Apr-2018 இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தீ விபத்து - 4 பேர் காயம்

 கேதார்நாத், ஏப்.4-

    உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் தரையிறங்கியபோது இந்திய விமானப்படையின் சரக்கு ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 இந்திய விமானப்படையின் சரக்கு ஹெலிகாப்டர் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் அருகில் உள்ள ஹெலிபேடு தளத்திற்கு நேற்று காலை சரக்குகள் கொண்டு செல்லப்பட்டன. ஹெலிபேடு தளத்தில் தரையிறங்கியபோது, திடீரென ஓரத்தில் இருந்த இரும்பு தூண் மீது ஹெலிகாப்டர் மோதி, பின்னர் தரையில் விழுந்தது.இதன் காரணமாக ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது.இதில் பைலட் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.

ஹெலிகாப்டரில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. எனினும் என்ஜின் பகுதியில் இருந்து தொடர்ந்து புகை வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. 


Label