OUR CLIENTS
லண்டன் முழுவதும் மலர் அலங்காரம் இளவரசர் திருமணம் களை கட்டுகிறது
லண்டன் முழுவதும் மலர் அலங்காரம் இளவரசர் திருமணம் களை கட்டுகிறது Posted on 04-Apr-2018 லண்டன் முழுவதும் மலர் அலங்காரம் இளவரசர் திருமணம் களை கட்டுகிறது

லண்டன், ஏப்.4-

இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணத்தை முன்னிட்டு லண்டன் நகரம் முழுவதும் மலர் அலங்காரம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்கா நடிகை மெகன் மார்க்கெலை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவரும் திருமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் சம்மதித்தனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் மே 19ம் தேதி லண்டன் செயின்ட் ஜார்ஜ் சர்ச்சில் திருமணம் நடக்கிறது.

இளவரசர் ஹாரி திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருமணத்திற்கான அழைப்பிதழ் தயாராகி விட்டது. திருமணத்திற்காக 600 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.  திருமணத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடக்கும் அனைத்து இடங்களிலும் மலர் அலங்காரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பார்வையாளர்கள் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் மலர் அலங்கார நிபுணர் பிலிப்பா கிராடாக் நியமிக்கப்பட்டுள்ளார். மணமக்கள் விருப்பப்படி அவர் அனைத்து அலங்காரங்களையும் செய்து வருவதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Label