OUR CLIENTS
அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பழி தீர்த்த சீனா
அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பழி தீர்த்த சீனா Posted on 04-Apr-2018 அமெரிக்காவை பொருளாதார ரீதியாக பழி தீர்த்த சீனா

பெய்ஜிங், ஏப்.4-

சீனப் பொருட்கள் மீது கூடுதல் கட்டணங்களை அமெரிக்கா விதித்ததற்கு பழி தீர்க்கும் விதமாக, அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா 3 பில்லியன் டாலர்கள் கட்டணம் விதித்துள்ளது

கடந்த மார்ச்  23ஆம் தேதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உத்தரவின்படி, சீனப் பொருட்கள் மீது 60 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கட்டணங்கள் விதிக்கப்பட்டது.  இவற்றில் அலுமினியம் மற்றும் எஃகுப் பொருட்களின் இறக்குமதியும் அடங்கும்.  இந்நிலையில் தற்போது சீன அரசு,   சுமார் 128 அமெரிக்கப் பொருட்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த கட்டணச் சலுகைகள், கழிவுகளை ரத்து செய்துள்ளது.  இதில் அலுமினியம், பழங்கள், பன்றி இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் அடங்கும் என ஸினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இத்தகைய கட்டண விதிப்புச் சுமை, உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளை மீறுவதாகும். ஆனால் அமெரிக்க நலன்களை காக்க, அமெரிக்காவுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அவ்வளவு உரிமை தங்களை காத்துக் கொள்ளவும் தங்களுக்கு உள்ளதாக சீனா நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இருதரப்பு வர்த்தக நெகிழ்வுகளையே சீனா மதிப்பதாக சீன நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Label