OUR CLIENTS
ரத்தக்களரியான ஆப்பிரிக்க கிராமம் உதவி எதிர்பார்க்கும் மக்கள்
ரத்தக்களரியான ஆப்பிரிக்க கிராமம் உதவி எதிர்பார்க்கும் மக்கள் Posted on 04-Apr-2018 ரத்தக்களரியான ஆப்பிரிக்க கிராமம் உதவி எதிர்பார்க்கும் மக்கள்

காங்கோ, ஏப்.4-

காங்கோ ஜனநாயக குடியரசில் சமீபமாக ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களால் ஒரு கோடிக்கும் மேலான மக்கள் பாதித்து வருகின்றனர். 

தனது பதவிக் காலம் முடிந்தும் அதிலிருந்து விலக மறுத்த அதிபர் கபிலாவின் முடிவிற்குப் பின் காங்கோ குடியரசு முழுவதும் வன்முறைகள் நடக்கின்றன. சமீபத்திய ஹேமா மற்றும் லுண்டு சமூகங்களுக்கு இடையேயான வன்முறைத் தாக்குதல்களில் நடந்த கொடூரங்களில் இருந்து அந்த மக்கள் மீளவில்லை. 

தன் கண்ணெதிரே முகம் கழுத்து கைகள் எனத் தாறுமாறாக வெட்டிக் கொலை செய்யப்பட தன் தங்கை மேரியின் சாவின் வேதனையிலிருந்து வெளி வர முடியவில்லை என மலோபி லிகா என்பவர் கூறுகின்றார். இந்தத் தாக்குதலின் போது நான்கு வயதுக் குழந்தையான ரோஸ் மாபென்சியும் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. அந்த மழலையின் கண்களுக்கு வெகு அருகே ஒரு நீளமான வெட்டு விழுந்துள்ளது.  இந்தப் படுகொலை சம்பவத்தின் போது 40 பேர் கொல்லப்பட்டனர். 
 
1998 - 2003 போருக்குப் பின்பு இந்த சமூகங்களுக்கு இடையிலான சண்டைகள் குறைந்திருந்த நிலையில் சில நில உரிமை தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் பகை ஏற்பட்டது.  இதனால் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது மனிதாபிமான உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Label