OUR CLIENTS
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் 52வது நாளாக நீடிப்பு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் 52வது நாளாக நீடிப்பு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் Posted on 05-Apr-2018 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் 52வது நாளாக நீடிப்பு  வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஏப்.5-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 52-வது நாளாக நேற்றும் நீடிக்கிறது. நேற்று கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதோடு அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் ஏற்படுவதாக புகார் கூறி அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அவர்களது போராட்டம் நேற்று 52-வது நாளாக நடக்கிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தினமும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் அ.குமரெட்டியாபுரம் கிராமத்திற்கு சென்று போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

அ.குமரெட்டியாபுரம் கிராமத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மேலும் சில கிராமத்திலும் போராட்டம் தொடங்கி உள்ளது. பண்டாரம்பட்டி கிராம மக்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்கிறது. அதே போல் நேற்று முன்தினம் வீரபாண்டியபுரம் கிராமத்தில் தொடங்கிய போராட்டம் நேற்றும் நீடிக்கிறது.

பொதுமக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி கல்லூரி மாணவர்களும் தினமும் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

Label