OUR CLIENTS
பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் மோடி சென்னை வருகையை உறுதி செய்த அதிகாரி
பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் மோடி சென்னை வருகையை உறுதி செய்த அதிகாரி Posted on 05-Apr-2018 பாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் மோடி சென்னை வருகையை உறுதி செய்த அதிகாரி

புதுடெல்லி, ஏப் 5

சென்னை அருகே நடைபெற உள்ள பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் மோடி 12-ம் தேதி முறைப்படி தொடங்கி வைக்க உள்ளதாக பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் விதமாக சென்னை அருகே உள்ள திருவிடந்தையில் வரும் 11-ம் தேதியில் இருந்து 14-ம் தேதிவரை பாதுகாப்பு கண்காட்சி நடத்தப்பட உள்ளது. ராணுவ தளவாட உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன்,  இஸ்ரேல், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட 42 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.   இந்த கண்காட்சி ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கினாலும், 12-ம் தேதி பிரதமர் மோடி முறைப்படி திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளதாலும், பல தரப்பிலும் எதிர்ப்பு இருப்பதாலும் மோடியின் வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், மோடியின் வருகையை பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு துறை செயலாளர் அஜய் குமார் உறுதி செய்துள்ளார். சென்னையில் வரும் 12ம் தேதி, பாதுகாப்பு கண்காட்சியை பிரதமர் மோடி முறைப்படி துவக்கி வைக்கிறார் என அஜய் குமார் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Label