OUR CLIENTS
கர்நாடகா தேர்தல் சித்தராமையா-எடியூரப்பா மகன்கள் நேருக்கு நேர் போட்டி
கர்நாடகா தேர்தல் சித்தராமையா-எடியூரப்பா மகன்கள் நேருக்கு நேர் போட்டி Posted on 05-Apr-2018 கர்நாடகா தேர்தல்  சித்தராமையா-எடியூரப்பா மகன்கள் நேருக்கு நேர்  போட்டி

பெங்களூரு, ஏப். 5

  கர்நாடகா தேர்தலில் முதல்வர் சித்தராமையாவின் மகன் டாக்டர் யதிந்த்ராவும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவும் வருணா தொகுதியில் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 12ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதையொட்டி வேட்பாளர்கள் தேர்வில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தீவிரமாக உள்ளன.

 இந்த நிலையில் முதல்வர் சித்தராமையாவின் மகன் டாக்டர் யதிந்த்ராவும், முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திராவும் வருணா தொகுதியில் நேருக்கு நேர் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. வருணா முதல்வர் சித்தராமையா வெற்றி பெற்ற தொகுதி. கடந்த 2008 மற்றும் 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் இதே தொகுதியில் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்வர இருக்கின்ற சட்ட சபை தேர்தலில் மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீசுவரி தொகுதியில் போட்டியிட போவதாக அவர் அறிவித்துள்ளார். எனவே இந்த தொகுதியில் தனது மகன் யதிந்தராவை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

 யதிந்த்ரா டாக்டராக இருக்கிறார். தொடக்கத்தில் அரசியலில் ஆர்வமின்றி இருந்தார். எனவே சித்தராமையா தனது மூத்த மகன் ராகேசை அரசியலில் களம் இறக்கினார். ஆனால் அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து யதிந்த்ரா அரசியலில் புகுந்தார். அதை தொடர்ந்து வருணா தொகுதியில் மக்கள் பணி ஆற்றி வருகிறார்தொகுதியில் பல கிராமங்களில் கூட்டங்கள் நடத்தி வளர்ச்சி பணிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தேர்தலில் தன்னை வெற்றி பெற செய்யும்படி தொகுதி மக்களிடம் கோரிக்கை விடுக்கிறார். இதற்கிடையே இத்தொகுதியில் 2 முறை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த தேர்தலில் மகனை இங்கு நிறுத்தி வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் சித்தராமையா இருக்கிறார்.

 முன்னாள் முதல்வர், பா.ஜனதா தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரனும் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இவரும் வருணா தொகுதியை குறி வைத்து தீவிர களப்பணியில் இறங்கியுள்ளார்மேலும் இத்தொகுதியில் சித்தராமையாவின் மகனுக்கு போட்டியாக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை களம் இறக்க வேண்டும் என பா.ஜனதா நிர்வாகிகள் ஆர்வமாக உள்ளனர்.

 இத்தொகுதியில் முதல்வர்  மகனுக்கு எதிராக போட்டியிட வேட்பாளர் இல்லாததால் விஜயேந்திராவை களம் இறக்க வேண்டும் என பா.ஜனதா நிர்வாகிகள் மேலிடத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். சித்தராமையாவுக்கு எதிரான காங்கிரசார் விஜயேந்திராவுக்கு ஆதரவாக மறைமுகமாக தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஜாதி வாரியாக உள்ள ஓட்டு விவரங்களையும் தெரிவித்துள்ளனர்.

 வருணா தொகுதி மைசூரு பகுதியில் உள்ளது. இங்கு காங்கிரசும், மதசார் பற்ற ஜனதா தளமும் செல்வாக்குடன் உள்ளன. இங்கு லிங்காயத் இன மக்கள் பெருமளவில் உள்ளனர். 60 ஆயிரம் லிங்காயத் இன ஓட்டுகள் உள்ளன.  42 ஆயிரம் தாழ்த்தப்பட்ட இன மக்களின் ஓட்டுகளும், மலைவாழ் இனமக்களின் 24 ஆயிரம் ஓட்டுகளும், 33 ஆயிரம் குர்பா இனஓட்டுகளும், 13 ஆயிரம் ஒக்காலிகா இனமக்களின் ஓட்டுகளும் உள்ளன. தற்போது லிங்காயத் இன மக்களுக்கு சிறுபான்மை இன அந்தஸ்து வழங்க கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. எனவே தங்களுக்கு லிங்காயத் இன ஓட்டுகள் முழுமையாக கிடைக்கும் என சித்தராமையா நம்புகிறார்.

 லிங்காயத் மற்றும் வீரசைவ லிங்காயத்துக்கள் சுத்தூர் மட ஆதரவாளர்களாவார்கள். இந்த மடம் எடியூரப்பாவுக்கு ஆதரவாக உள்ளது. எனவே லிங்காயத் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்கும் என பா.ஜனதா கருதுகிறது.   இத்தொகுதியை பொறுத்த வரை எடியூரப்பா- சித்தராமையா இடையே ஒரு கவுரவ பிரச்சினையாக கருதப்படுகிறது. இந்நாள் மற்றும் முன்னாள் முதல்வர்களின் மகன்களின் நேரடி போட்டியால் இத்தொகுதியில் கடும் போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Label