OUR CLIENTS
தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு பாராளுமன்றத்தில் மத்தியமைச்சர் தகவல்
தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு பாராளுமன்றத்தில் மத்தியமைச்சர் தகவல் Posted on 05-Apr-2018 தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு பாராளுமன்றத்தில் மத்தியமைச்சர்  தகவல்

சென்னை, ஏப்.5

  மாணவர்கள் தற்கொலை விகிதம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகரித்து வருவதாக பாராளுமன்றத்தில் மத்தியமைச்சர் எழுத்துபூர்வமாக கூறியுள்ளார் நாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் பாராளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் மாணவர்கள் தற்கொலை விகிதம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 நாடு ழுழுவதும் 2014-ம் ஆண்டு 8068 மாணவர்கள் தற்கொலை செய்தனர். 2015-ல் இது 8934 ஆக அதிகரித்தது. 2016-ல் 9474 மாணவர்கள் தற்கொலை செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 2016-ம் ஆண்டு கணக்கின்படி நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் தான் அதிக மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அங்கு 1350 பேர் உயிரை மாய்த்திருக்கிறார்கள். மேற்குவங்காள மாநிலத்தில் 1147 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் அந்த மாநிலம் 2-வது இடத்தில் உள்ளது. மாணவர் தற்கொலையில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. இங்கு 2016-ல் 981 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

 இதுதொடர்பாக சென்னை சிம்ஸ் ஆஸ்பத்திரி மனதத்துவ டாக்டர் விவியன் கபில் கூறும்போது, ஒரு மாணவனின் ஆற்றலை பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவருடைய கல்வி அறிவை வைத்தே எடை போடுகிறார்கள். அதில் அவர்கள் தோல்வி அடையும்போது, இதுபோன்ற தவறான முடிவுக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறதுமாணவர்களின் நிலையை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மீது அதிக அழுத்தத்தையும், எதிர் பார்ப்புகளையும் திணிக்க கூடாது என்று கூறினார்.

 அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மனோதத்துவ நிபுணர் டாக்டர் ராமன் கூறும்போது, தன்னம்பிக்கையில் பாதிப்பு ஏற்படுவது, ஒரு விஷயத்தில் ஆர்வமில்லாமை, சில விஷயங்களில் அடிமையாவது போன்றவை தற்கொலைக்கு இழுத்து செல்கிறது. அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டால் இதுபோன்றவற்றை தடுத்துவிடாலாம் என்று கூறினார்

Label