OUR CLIENTS
சென்னை ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு தடை விதிக்குமா தமிழக அரசு?
சென்னை ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு தடை விதிக்குமா தமிழக அரசு? Posted on 05-Apr-2018 சென்னை ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு  தடை விதிக்குமா தமிழக அரசு?

சென்னை, ஏப்.5-

காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் .பி.எல் போட்டிகளை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறிய கருத்தை, அரசியல் கட்சிகளும் முன்மொழியத் தொடங்கியிருக்கின்றன. ' இதேபோன்ற ஒரு சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டியை சேப்பாக்க மைதானத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்' என்கின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.

 தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்பட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பலரும், .பி.எல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும். மைதானங்களுக்குச் செல்லாமல்விட்டுவிட்டால், உலக அரங்கில் காவிரி விவகாரம் கவனம் பெறும்' எனப் பேசி வருகின்றனர்.

 இதுகுறித்து நேற்று பேசியுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் .ஆர்.ஈஸ்வரன், ' காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று ஆளுங்கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுமே தமிழகத்தில் தெருவில் இறங்கி போராடி வருகிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், இரயில் மறியல், விமானநிலைய முற்றுகை, கடையடைப்பு போன்ற பல வகையான போராட்டங்கள் நடந்து வருகிறதுகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இந்த தொடர் போராட்டங்கள் நிற்காது என்பது கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலை.

தமிழக இளைஞர்களைப் பொறுத்தவரை எப்படி தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது என்று குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல மெரினாவில் போராட்டத்தை தொடங்கி தமிழகம் பூராவும் நடத்தலாம் என்றால் தமிழக காவல்துறை தடுத்து நிறுத்துகிறது. ஆனால், இளைஞர்களும், மாணவர்களும் களமிறங்கினால் தான் மத்திய அரசு பயப்படும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நடக்கப்போகின்ற .பி.எல் போட்டி கிரிக்கெட் மைதானத்தை பயன்படுத்தி கொண்டால் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விளையாட்டு மைதானத்துக்கு உள்ளே சென்றுவிட்டு விளையாட்டு போட்டியும் நடக்கவிடாமல் இரவுப்பகலாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினால் உலகம் முழுவதும் இந்த செய்தி போய்சேரும் என்கின்ற திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. அப்படி, உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினால், ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகம் முழுவதும் அது பற்றிக்கொள்ளும். மாநில அரசு காவல்துறையை கொண்டு கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காவல்துறையில் இருப்பவர்களும் தமிழர்கள்தான். அவர்களுக்கும் காவிரி தண்ணீர் வேண்டும். தமிழக அரசே உண்ணாவிரதம் போன்ற அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பதற்காக இப்படிப்பட்ட முயற்சியை இளைஞர்கள் முன்னெடுத்தால் அது வெற்றி பெறும். ஆனால், அதேநேரம் உணர்வுப்பூர்வமான இந்த போராட்டம் வன்முறைகளுக்கு வித்திடலாம்சட்டம் ஒழுங்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போகலாம்

 இப்படிப்பட்ட நிலைப்பாடுகளை தவிர்க்க தமிழக அரசு வரும் 10-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கின்ற .பி.எல் போட்டியை நடத்தவிடக்கூடாது. இதேபோல, ஒரு சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியை சேப்பாக்க மைதானத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். .பி.எல் போட்டி என்பது ஒரு கொண்டாட்டம். கொண்டாடுகின்ற மனநிலையில் தமிழர்கள் இல்லை. அதை இந்த உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. உடனடியாக .பி.எல் போட்டிகளை இப்போது நடத்த முடியாது என்று தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடக்கின்ற காவிரி உரிமை போராட்டத்தை ஐபிஎல் போட்டி திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்' என வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார்.

 .பி.எல்லுக்கு எதிரான ஆட்டத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாகக் களமிறங்கிவிட்டன. இதுகுறித்து இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசனிடம் பேசியிருக்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன். இதனையடுத்து, '.பி.எல் போட்டிகளுக்கு ஏதேனும் தடை வந்துவிடுமோ?' என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள்

Label