OUR CLIENTS
காவிரி மேலாண்மை வாரியம் கோரி மெரினா சாலையில் மறியல்! - மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது
காவிரி மேலாண்மை வாரியம் கோரி மெரினா சாலையில் மறியல்! - மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது Posted on 05-Apr-2018 காவிரி மேலாண்மை வாரியம் கோரி மெரினா சாலையில் மறியல்! - மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது

சென்னை, ஏப்.5-
சென்னை அண்ணா சாலை மறியலைத் தொடர்ந்து, மெரினாவுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.

 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு அழுத்தம் தரவில்லை எனக் கூறி மாநில அரசைக் கண்டித்தும், திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததோடு, ஆங்காங்கே மறியல் போராட்டங்களும் நடைபெற்றன.   சென்னை அண்ணாசாலையில், சிம்சன் பகுதியில் நான்குமுனைச் சந்திப்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. திருநாவுக்கரசர், திருமாவளவன், கி.வீரமணி உள்ளிட்டோரும் இந்த மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றாக முடங்கியது.

அண்ணா சாலையில் பகுதி பகுதியாக பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எல்லா திசைகளில் இருந்தும் திடீரென ஒரே இடத்தில் திரளத் தொடங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. பின்னர் எதிர்பாராதவிதமாக ஆயிரக் கணக்கானோர் பின்தொடர மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக புறப்பட்டனர். மெரீனாவை நோக்கி, வாலஜா சாலையில் கருப்புக் கொடியை ஏந்தியவாறு தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் ஊர்வலமாகச் சென்றார். போலீசார் தடுப்புகளை அமைத்து பேரணியை தடுக்க முயன்றனர். ஆனால் அவற்றை அகற்றிவிட்டு சேப்பாக்கத்திற்கு பேரணி முன்னேறியது.

பேரணியாக மெரினா சென்றவர்கள் கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைதாக மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து உழைப்பாளர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டிருந்த மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார்.   மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை மறித்து திமுக மற்றும் தோழைமக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு தொண்டர்கள் புடைசூழ போலீஸ் வாகனம் புறப்பட்டது.

Label