OUR CLIENTS
துப்பாக்கியால் சுட்டாலும் திமுக போராட்டம் ஓயாது- துரைமுருகன் தீர்க்கமான பேச்சு
துப்பாக்கியால் சுட்டாலும் திமுக போராட்டம் ஓயாது- துரைமுருகன் தீர்க்கமான பேச்சு Posted on 05-Apr-2018 துப்பாக்கியால் சுட்டாலும் திமுக போராட்டம் ஓயாது- துரைமுருகன் தீர்க்கமான பேச்சு

வேலூர், ஏப்.5-

துப்பாக்கியால் சுட்டாலும் திமுக மற்றும் அதன கூட்டணிக்கடசிகளின் போராட்டம் போராட்டம் ஓயாது என்று திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தின.  வேலூர் காட்பாடியில் ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் அங்கு கைது செய்யப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், காவல்துறையை வைத்து தாக்கினாலும் சரி, துப்பாக்கியால் சுட்டாலும் சரி போராட்டம் ஓயாது. பாலுக்கு காவல் பூனைக்கு தோழன் என்பது போல் தமிழக அரசு உள்ளது. மத்திய அரசுக்கு காவலாகவும் எங்களுக்கு பூனையாகவும் இருக்கிறார் முதல்வர் பழனிசாமி  என்று துரைமுருகன் கூறினார்.

Label