OUR CLIENTS
அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் போராடுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார்
அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் போராடுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார் Posted on 05-Apr-2018 அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் போராடுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, ஏப்.5-

அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் போராடுவதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  உண்ணாவிரதம் உள்ளிட்ட ஜனநாயக வழி போராட்டங்களுக்கு ஜனநாயக நாட்டில் ஆதரவு உண்டு. அவசர ஊர்திகூட செல்லமுடியாத அளவுக்கு திடீரென மறியல் செய்வது முறையல்ல. 356வது பிரிவின்கீழ் ஆட்சியை கலைக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என நான் குற்றம் சாட்டுகிறேன்.

ஆட்சியை கவிழ்க்கும் ஸ்டாலினின் முயற்சி நிறைவேறவில்லை.  ஆட்சியை கவிழ்க்க முடியாததால் அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் போராடுகிறார்.  பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன. காவல்துறை அதிகாரி மீதும் கல் வீசப்பட்டுள்ளது. ஆதிகால மனிதர்கள் போல கற்களை வீசி திமுகவினர் தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது. நாகரீகம் வளர்ந்துவிட்ட சூழலில் கற்களை வீசும் அளவுக்கு கற்காலத்திற்கு சென்றுவிட்டதா திமுக?. 

காவிரி மேலாண்மை வாரியம், நீர் முறைப்படுத்தும் குழு என அனைத்தும் அடங்கியதே ஸ்கீம்.  உச்சநீதிமன்றத்தில் வலிமையாக வாதாடி தமிழகத்திற்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறியல், கல்வீச்சு என சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்த திமுக அணியினர் முயற்சி செய்து வருகின்றனர். எந்தவித அறிவிப்பும் இன்றி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது.  இவ்வாறு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Label