OUR CLIENTS
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாணவர்கள் போராட்டம் - தேர்வுகள் ரத்து
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாணவர்கள் போராட்டம் - தேர்வுகள் ரத்து Posted on 06-Apr-2018 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  மாணவர்கள் போராட்டம் - தேர்வுகள் ரத்து

தஞ்சாவூர், ஏப்.6-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

காவிரிப் பாசன மாவட்ட மாணவர் கூட்டமைப்பினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆற்றுப்பாலம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அதன்பின் கல்லணைக் கால்வாய் ஓரத்தில் உள்ள நடைபாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்துக் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மாணவர்கள் ஒருவருக்கொருவர் கைகோத்துக் கொண்டு அங்கிருந்து நகர மறுத்தனர். இதையடுத்துக் காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதைக் கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்ட இருநூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தித் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினர் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே புனல்குளத்தில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2000 பேர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திச் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தஞ்சாவூர் - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Label