OUR CLIENTS
காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சியில் ஜி.கே.வாசன், விவசாயிகள் உண்ணாவிரதம்
காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சியில் ஜி.கே.வாசன், விவசாயிகள் உண்ணாவிரதம் Posted on 06-Apr-2018 காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சியில் ஜி.கே.வாசன், விவசாயிகள் உண்ணாவிரதம்

சென்னை, ஏப்.6-

 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சி உழவர் சந்தை பகுதியில்  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்  தலைமையில் விவசாயிகளின் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.  திருச்சி காவிரி ஆற்றில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மணலில் புதைந்து போராட்டம் நடத்தினார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய - மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு விவசாய சங்கத்தினர், கல்லூரி மாணவர்களும், போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சி காவிரி ஆற்றில், அய்யாக்கண்ணு தலைமையில் ஆற்று மணலில் புதைந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் வெயில் கொளுத்துவதால் ஆற்று மண்ணில் புதைந்து போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறையினர் வெளியேற்றி அப்புறப்படுத்தினர். அனைத்து விவசாயிகளையும் மணலில் இருந்து வெளியே மீட்டு போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சி உழவர் சந்தையில் இன்று காலை 9.30 மணி முதல் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது,  நீதிமன்ற கெடு முடிந்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு, கர்நாடக முதலமைச்சர் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.  காவிரி பிரச்னையில் அனைத்து கட்சியினரும் ஒருமித்த கருத்தோடு போராட வேண்டும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரி பிரச்னைக்காகவும், சிறுபான்மை மக்களுக்காகவும் தமாகா தொடர்ந்து போராடும் என ஜி.கே.வாசன் கூறினார்.  ஜி.கே.வாசனின் உண்ணாவிரதத்தில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த அய்யாகண்ணு, பி.ஆர். பாண்டியன், மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

Label