OUR CLIENTS
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு Posted on 06-Apr-2018 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஏப்.6-

    நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மற்றும் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி உள்ளன. அமளியை காரணம் காட்டி, அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளாக  நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இதன்காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் ஒருநாள் கூட அவை செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Label