OUR CLIENTS
மத்தியமைச்சர் அருண்ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் - டாக்டர்கள் தீவிர ஆலோசனை
மத்தியமைச்சர் அருண்ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் - டாக்டர்கள் தீவிர ஆலோசனை Posted on 06-Apr-2018 மத்தியமைச்சர் அருண்ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் - டாக்டர்கள் தீவிர ஆலோசனை

புதுடெல்லி, ஏப்.6-

    உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மத்தியமைச்சர் அருண்ஜெட்லிக்கு டாக்டர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நீண்ட காலமாகவே உடல்நலம் இல்லாமல் இருந்து வருகிறார்.  அவர், தற்போது வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்தார். உடல்நல பாதிப்பு காரணமாக வெளிநாடு பயணத்தை ரத்து செய்துள்ளார்.  அவரது சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  அருண்ஜெட்லி டுவிட்டர் வலைத்தளத்தில் ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார்.

அதில், எனக்கு சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்று உருவாகி உள்ளது. எனவே, இதற்கான சிகிச்சை எடுத்து கொள்ள போகிறேன்.  தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறேன். எந்த மாதிரி சிகிச்சை என்பதை டாக்டர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறி இருந்தார்.  அவருக்கு டாக்டர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று முன் தினம் மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு திடீரென வந்தார். சிறுநீரகம் தானம் தொடர்பாக சில சம்பிரதாய பணிகளை முடிப்பதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு வந்ததாக தெரிகிறது.

ஆனால், அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட உள்ளது? என்ற விவரத்தை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சொல்ல மறுத்து விட்டனர். ஆனாலும், சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் நடத்துவதற்கு டாக்டர்கள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் உள்ள ‘கார்டியோ நீரோ’ பிரிவில் அனுமதிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.  2016-ம் ஆண்டு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Label