OUR CLIENTS
காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்தியா 4 பதக்கங்கள் வென்றது
காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்தியா 4 பதக்கங்கள் வென்றது Posted on 06-Apr-2018 காமன்வெல்த் போட்டி  பளு தூக்குதலில் இந்தியா 4 பதக்கங்கள் வென்றது

கோல்ட் கோஸ்ட், ஏப்.7-
                 21 ஆவது காமன்வெல்த் போட்டியில் இன்று நடைபெற்ற 53 கிலோ எடைப் பிவு, மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை சஞ்சிதா சானு தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். மேலும் 69 இடைப் பிரிவில் ஆடவருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் தீபக் லாதர் வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம் 4 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.

21 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 04/04/2018ம்  தேதி தொடங்கியது. இதில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், 53 கிலோ எடைப்பிரிவில் மகளிருக்கான பளுதூக்குதல் போட்டி இன்று  நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொண்ட இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கத்தை தட்டிச்சென்றார். இதில் சஞ்சிதா பானு, மொத்தம் 192 கிலோ (84+108) எடையை தூக்கி அசத்தினார். இவருக்கு அடுத்தபடியாக பபுவா நியூ கினியாவைச் சேர்ந்த வீராங்கனை லோவா டிகா டவா மொத்தம் 182 கிலோ (80+102) எடையை தூக்கி 2 ஆவது இடத்தைப் பிடித்தார். கனடாவைச் சேர்ந்த ரகேல் லீபிளான்க் பாஸினட் மொத்தம் 181 கிலோ (81+100) எடையை தூக்கி 3 வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்தியன் ரயில்வேயில் பணிபுரிந்து வரும் சஞ்சிதா சானு பின்னர் கூறுகையில்,”பதக்கத்தை வெல்ல நான் தற்போது உகந்த நிலையில் இல்லை என பலர் கூறினர். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் என்னுடைய முதுகில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. பல சோதனைகளை நான் கடந்து இந்த இடத்திற்கு நான் வந்துள்ளேன். அவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்ததும், பதக்கத்தை பெரும் தருவாயில் எனக்கு அழுகை வந்தது” என்று உணர்ச்சிப்பெறுக கூறினார்.

அதைத்தொடர்ந்து ஆடவருக்கான பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. 69 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீரர் தீபக் லாதர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நேற்று   நடந்த பளுதூக்கும் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தன. காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 4 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

”இந்தியா 2 ஆவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியின் 53 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்ற சஞ்சிதா சானுவிற்கு எனது வாழ்த்துக்கள். அவரது வியக்கத்தக்க செயல்திறனைக் கண்டு நமது நாடு பெருமிதம் கொள்கிறது” என்று பிரதமர் மோடி  டுவிட்டரில்குறிப்பிட்டுள்ளார்.

Label