OUR CLIENTS
சவுதியில் முதல் முறையாக தியேட்டர் 18ம் தேதி முதல் சினிமா பார்க்கலாம்
சவுதியில் முதல் முறையாக தியேட்டர் 18ம் தேதி முதல் சினிமா பார்க்கலாம் Posted on 06-Apr-2018 சவுதியில் முதல் முறையாக தியேட்டர்  18ம் தேதி முதல் சினிமா பார்க்கலாம்

துபாய், ஏப்.6-
        சவுதி அரேபியாவில் வரும் 18ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர்  முகமது பின் சல்மான் நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பெண்களை அடிமையாக்கும் வகையிலான சட்டங்களை அவர் திருத்தியுள்ளார்.   பெண்கள் தனியாக கார் ஓட்டி செல்லலாம். பெண்களை சந்தேகிக்கி கூடாது. பர்தா அணிவது கட்டாயம் இல்லை போன்ற அறிவிப்புகளை இளவரசர் வெளியிட்டார். விளையாட்டு போட்டிகளை பெண்கள் பார்த்து ரசிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல் சவுதியில் சினிமா தியேட்டர் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுமார் 40 ஆண்டுகளுக்கு  பின் முதல் முறையாக வரும் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்பட துவங்கும் என சவுதி அரசு அறிவித்துள்ளது.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன்மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சவுதியில் உள்ள 15 நகரங்களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும் என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.

தற்போது ஆண், பெண் என இருக்கைகள் பிரிக்கப்படாமல் பொதுவாக அமைக்கப்படுகிறது.  சினிமா மீதான தடை விலக்கப்படுவதால் பொழுதுபோக்குத்துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது. இனி சினிமா மூலமும் பொழுதுபோக்கலாம் என சவுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Label